பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன், கடுமையான சட்டங்களை இயற்ற அரசு தயார் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி

Dec 2 2019 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண்களுக்‍கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்‍க, அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளிக்‍கும் பட்சத்தில், கடுமையான தண்டனை விதிக்‍கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தெலங்கானவைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்‍கொல்லப்பட்ட சம்பவம், நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, பெண்களுக்‍கு எதிரான குற்றங்களை தடுத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த புதிய மசோதா தேவையில்லை என்றும், அரசின் திடமான நடவடிக்‍கையும், நிர்வாக திறனும், மனநிலையில் மாற்றமும்தான் தேவை என்றும் கூறினார்.

சட்டங்களால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளை தடுத்துவிட முடியாது என்றும், அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டதாக தமிழக எம்.பி. திருமதி. விஜிலா சத்யானந்த் கண்டனம் தெரிவித்தார். தெலங்கானா பெண் மருத்துவர் வழக்‍கை விசாரிக்‍க விரைவு நீதிமன்றம் அமைக்‍கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் 4 பேரும், இம்மாத இறுதிக்‍குள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பெண்களுக்‍கு எதிரான குற்றங்களை தடுக்‍க, சரியான மற்றும் திட்டவட்டமான நடவடிக்‍கையை, அரசிடமிருந்து மக்‍கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த எம்.பி. திருமதி. ஜெயா பச்சன், பாலியல் குற்றவாளிகளுக்‍கு, பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே, மக்‍களவையில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜநாத் சிங், பெண்களுக்‍கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்‍க, அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளித்தால், கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00