மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலம் : பச்சை பட்டுடுத்தி தங்கக்‍குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பக்‍தி கோஷங்களுடன் மகிழ்ச்சி ஆரவாரம்

Apr 19 2019 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்‍கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியபோது, பக்‍தர்கள் பக்‍தி கோஷங்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் வகையில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று, சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் அழகர்கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டார். பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி மதுரை நோக்கி வந்த கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை, மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி என்ற எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 12.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு, வெட்டிவேர் சப்பரத்திலும், அதன் பின்னர் ஆயிரம் பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் ஏறி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில், அழகர் வேடமிட்ட பக்தர்கள், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் வரவேற்றனர். அப்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏந்தியும், கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக, வண்ணமலர்களால் மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00