48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி

Oct 13 2019 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர், மாவட்ட, மாநில மற்றும் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 48 தங்கப் பதக்‍கங்கள் 10 வெள்ளிப் பதக்‍கங்கள் 8 வெண்கலப் பதக்‍கங்கள் என வெற்றிப் பதக்‍கங்களைக்‍ குவித்து சாதனைபடைத்து வருகிறார்.

ராமநாதபுரத்தில், காவல்துறை துணை ஆய்வாளரான திரு. மோகனின் மகள், ஐஸ்வர்யா, அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 வகுப்பில் பயின்று வருகிறார். தனது தந்தையின் வழிகாட்டுதலில் சிறு வயதிலிருந்தே, வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய தடகளப் போட்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.

மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்‍கங்களையும், வெள்ளிப் பதக்‍கங்களையும் வென்ற மாணவி ஐஸ்வர்யா, அண்மையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் நடைபெற்ற மாநில அளவிலான வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்‍கங்களை வென்றுள்ளார். இருவாரங்களுக்‍கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்மாநிலங்களுக்‍கு இடையேயான போட்டியிலும், அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியிலும் பங்கேற்று தங்கப் பதக்‍கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரையில் 48 தங்கப் பதக்‍கங்கள் 10 வெள்ளிப் பதக்‍கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்‍கங்களை வென்றுள்ள தடகள வீராங்கனை ஐஸ்வர்யா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் தடம் பதிக்‍க வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளார். அவர் வீடு முழுவதும் நிறைந்துள்ள, சான்றிதழ்களும், பதக்‍கங்களும் அவரது சர்வதேச சாதனைக்‍கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00