திருச்சியில் யோகாசன போட்டி மற்றும் உலக சாதனை நிகழ்ச்சிகள் : பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்
Nov 24 2019 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி மற்றும் யோகாசன உலக சாதனை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் ருத்ரசாந்தி யோகாலயம் சார்பில், யோகாசனத்தை பிரபலப்படுத்தும் வகையில், திருச்சி மாவட்டத்தில், 25-வது ஆண்டாக, யோகாசன மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று, மாநில அளவிலான யோகாசன போட்டி மற்றும் யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 500-க்கும் மேற்பட்ட யோகாசன வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவி மதுரவள்ளி, 30 நிமிடம் முலாம்பழம் மீது பத்மாசனத்தில் அமர்ந்தபடி ஆசனம் செய்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.