விவசாயிகள் பெயரில் வங்கிக்கடன் பெற்று 300 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் - தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக கும்பகோணம் பகுதி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

Jan 11 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில், விவசாயிகள் பெயரில் வங்கிக்கடன் பெற்று 300 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருமண்டங்குடியில் செயல்பட்டு வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளிடம் கரும்புகளை பெற்றுக்கொண்டு, 30 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவைத் தொகை வைத்துள்ளது.

நிலுவைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக் கூறி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கிய ஆலை நிர்வாகம், ஒவ்வொரு விவசாயிகளின் பெயரிலும் 2 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது.

கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியிலிருந்து வந்த நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆலைக்கு கடன் அளித்த பாபநாசம் SBI வங்கியை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00