மதுரை அலங்காநல்லூரில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணியினர் மோதல் - முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறக்கணித்தால், பொதுமக்‍கள் அதிருப்தி

Jan 11 2019 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை அலங்காநல்லூரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினர் மோதல் காரணமாக, முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறக்கணித்த சம்பவம், பொதுமக்‍களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியையொட்டி, முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சிக்‍கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி, அனுமதியின்றி வழிநெடுகிலும் உதயகுமார் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்‍கப்பட்டிருந்தன. அமைச்சரை வரவேற்க அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காத்திருந்தநிலையில், விழாவில் கலந்து கொள்ள செல்லூர் ராஜூ-க்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் கேட்ட உதயகுமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

இதனிடையே செல்லூர் ராஜூ-வின் வருகையை அறிந்த ஆர்.பி.உதயகுமார், முகூர்த்த கால் நிகழ்ச்சியை புறக்‍கணித்து விட்டு, கிளம்பி சென்றார். செல்லூர் ராஜூ தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. ஜல்லிக்‍கட்டு போட்டி தொடக்‍கத்திலேயே, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணிகள் இடையிலான மோதல், கிராம மக்‍களை முகம் சுழிக்‍க வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00