புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ராமாவரத்தில் அவரது இல்லத்தில் உள்ள திருவுருச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Jan 17 2019 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள திருவுருச் சிலைக்‍கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறமையற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. தலைமைக்கழக பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி, தென்சென்னை வடக்கு மாவட்ட கழகத் துணைச்செயலாளர் திரு.வைதியநாதன் உள்ளிட்டோர் எம்ஜிஆர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறமையற்ற பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக தொண்டர்களும் மற்றும் நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

வட சென்னை தெற்கு மாவட்டம் துறைமுகம் பகுதிக்‍ கழகம் சார்பில், சவுகார்பேட்டையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கும், தங்கசாலைத் தெருவில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும், மாவட்ட கழக செயலாளர் திரு. பி.சந்தானகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட கழக துணை செயலாளர் திரு. டி.வி. நாசர், துறைமுகம் பகுதி கழக செயலாளர் திரு. E.B. பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வட சென்னை தெற்கு மாவட்டம் எழும்பூர் பகுதி கழகம் சார்பில் சென்னை பெரியமேட்டில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை-எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டன. எழும்பூர் பகுதி கழக செயலாளர் திரு. வெங்கடேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை வடக்‍கு மாவட்டம், திருவல்லிக்‍கேணி-சேப்பாக்‍கம் பகுதிக்‍ கழகம் சார்பில், ஐஸ் அவுஸ் பகுதியில் அமைக்‍கப்பட்டுள்ள எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை எளியோருக்‍கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சேப்பாக்‍கம் பகுதி கழகச் செயலாளர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00