ஸ்டெர்லைட் ஆலைக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி ஆலை எதிர்ப்பு இயக்‍கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தூத்துக்‍குடியில் மீண்டும் பதற்றம்

Jan 18 2019 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி ஆலை எதிர்ப்பு இயக்‍கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்‍கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை அருகே பண்டாரம்பட்டியில், ஆலை எதிர்ப்புக்‍ குழுவினைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தோஷை நிபந்தனை ஏதுமின்றி விடுவிக்‍கும் போராட்டம் தொடரும் என ஆலை எதிர்ப்புக்‍குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்‍களை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவிக்‍கச் சென்றனர். ஆனால், அவர்களை அனுமதிக்‍காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00