காணும் பொங்கல் - களைகட்டிய சுற்றுலாத்தலங்கள் : பொதுமக்கள் ஆடிப்பாடி உற்சாகக் கொண்டாட்டம்

Jan 18 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் லட்சக்‍கணக்‍கான பொதுமக்கள் குவிந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதி மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், திரை அரங்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. முட்டுக்காட்டில் உள்ள அரசு படகு குழாமில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடற்கரையில் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் கடலோர பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா மையத்தில் பொதுமக்‍கள்​அதிக அளவில் குவிந்தனர். அங்குள்ள சமணர் படுகை, படகு குழாம், சித்தன்னவாசல் குகைக் கோயில், குடவரை கோயில், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மலையின் உச்சியில் உள்ள குடைவரைக் கோவிலில் மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியங்கள், தாமரைக்குளம், அன்னப்பட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அதிசய காட்சியை பொதுமக்‍கள் கண்டு ரசித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சிக்கோட்டையை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விடூர் அணை, கோமுகி அணை உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களிலும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருவக்கரை வக்ர காளியம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். கோடியக்காடு ராமர்பாதம், கோடியக்கரை கடற்கரை பகுதி, கோடியக்காடு பறவைகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்‍கை அதிக அளவில் காணப்பட்டது. வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மான்கள், குதிரை, நரி, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டு களித்தனர்.

தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ்கோட்டை அருங்காட்சியகத்தில், பழமையான பீரங்கி டேனிஷ் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால நாணயங்கள், தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் சுற்றுலா பொங்கல் நடைபெற்றது. தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புற இசை, நடனங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமைந்தது.​

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில், பூங்காவில் வலது கரை பூங்கா, இடதுகரை பூங்கா, சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பூங்கா, காந்தி மண்டம், வைகை உல்லாச ரயில் மற்றும் இசை நடன நீருற்று உள்ளிட்ட இடங்களில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் தாய் கிராமமான வில்பட்டியில் உள்ள வெற்றி வேலப்பர் கோவில் வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. கொடைக்கானல் பூம்பாறையைச் சேர்ந்த வடிவேல் குழுவினர் சார்பில், சிலம்பாட்டம் புலியாட்டம், கட்டைக்கால் நடனம் மற்றும் அழகர் தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கலந்துகொண்டு, தப்பாட்ட குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடினர்.

கொடைக்‍கானலில் சுற்றுலா இடங்களான வெள்ளி நீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். குளிரையும் பொருட்படுத்தாமல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் பூங்காவிலுள்ள சறுக்குமரம் மற்றும் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00