வருசநாடு வனப்பகுதிக்குள் கேரள வனத்துறையினரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - முல்லைப் பெரியாறு அணை குறித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
Feb 8 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குள் வந்த கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி முல்லைப் பெரியாறு அணை குறித்து சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில், கேரள வனத்துறை வாகனத்தை வழிமறித்த கிராம மக்கள், தமிழக வனப்பகுதிக்குள் செல்ல முறையாக அனுமதி பெற்றுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். மேலும், பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்த தமிழக அதிகாரிகளை கேரள அரசு ஏன் அனுமதிப்பதில்லை என்றும் சரமாரி கேள்வி எழுப்பினர். கிராம மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கேரள வனத்துறையினர் திரும்பிச் சென்று, கண்டமனூர் வனச்சரகரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் தமிழக வனப்பகுதிக்குள் கேரள வனத்துறையினர் அனுமதிக்கப்பட்டனர். கேரள வனத்துறையினரின் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை போலீசார் சோதனை செய்து அனுப்பினர்.