மாதவரம் தொடங்கி கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு

Feb 8 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாதவரம் தொடங்கி கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்கப்படவுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றன. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம், மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் போன்றவை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பெயரில் புதிய அறிவியல் கலைக் கல்லூரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வெள்ளத் தடுப்பணை, சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் பேட்டரி பேருந்துகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுமென பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் - கோயம்பேடு - சோழிங்கநல்லூர் இடையே, ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் எனவும் நிதியமைச்சர் திரு.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

இதேபோல், 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் போன்ற மேலும் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00