தமிழகம் தலைநிமிர்ந்திட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை ஆதரிக்‍க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Feb 12 2019 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் தலை நிமிர்ந்திட, குக்‍கர் சின்னத்தில் வாக்‍களித்து, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று அங்கு புறப்பட்டுச் சென்ற திரு.டிடிவி தினகரனுக்‍கு, ஆரணியில் பெண்கள், பொதுமக்‍கள், கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு, பொதுமக்கள், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடப்பேரி பகுதியை சேர்ந்த மணமக்கள் ராமராஜன் - அம்சம் தம்பதிகளுக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி அப்பகுதி வழியாக வந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் மணமக்கள் ஆசி பெற்றனர்.

காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓச்சேரி பகுதியிலும் கழகக் கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்.

இதேபோல், நெமிலி பகுதிக்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரன், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசினார். துரோக ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்துள்ள தமிழக மக்‍கள், செல்லும் இடங்களிலெல்லாம் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் கழக அலுவலகத்தை திரு. டிடிவி தினகரன் திறந்து வைத்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக்‍ கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்.

சம்பத்துராயம் பேட்டை பகுதியில், நெமிலி ஒன்றியக் கழக நிர்வாகி திரு. கோ.சி. மணிவண்ணன் இல்லத் திறப்பு விழாவில் திரு. டிடிவி தினகரன் பங்கேற்றார். நெமிலி ஒன்றியக் கழக அலுவலகத்தையும் திறந்துவைத்தார். அம்மனூர் பகுதியில், கழகக் கொடியேற்றி வைத்து அங்கிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00