ஈரோடு புறநகர், ஈரோடு மாநகர் மாவட்டங்களுக்‍கு உட்பட்ட தொகுதிகளில் டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப்பயணம் - வரும் 13-ம் தேதிமுதல் 17ம் தேதி வரை நடைபெறும் என தலைமைக்‍கழகம் அறிவிப்பு

Feb 12 2019 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஓர் அரசியல் புரட்சிக்‍கு வித்திடும் வகையில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்டு வரும் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் அடுத்தக்‍கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட பல்வேறு இடங்களில், வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

தமிழகத்தின் எட்டுதிக்‍கும் மக்‍கள் சந்திப்பு புரட்சி பயணத்தின் மூலம் மக்‍களையும், கழகத் தொண்டர்களையும் சந்தித்து வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, செல்லும் இடமெல்லாம் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன் அடுத்த‍ கட்டமாக ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்‍கு, ஈரோடு மேற்கு, மொடக்‍குறிச்சி மற்றும் பவானி ஆகிய சட்டமன்றத்​தொகுதிகளிலும், வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 13-ம் தேதி காலை 9 மணி அளவில் ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகிலிருந்து மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்ளும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், காலை 11 மணி அளவில் தாளவாடி பஸ் நிலையம் அருகே எழுச்சியுரையுடன் பயணத்தை நிறைவு செய்கிறார்.

வரும் 14-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் அந்தியூர் சட்டமன்றத்​ தொகுதிக்‍குட்பட்ட அத்தாணியிலும், மாலை 5 மணி அளவில் அந்தியூரிலும், மாலை 6 மணி அளவில் டி.என். பாளையத்திலும் திரு. டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு எழுச்சியுரை நிகழ்த்துகிறார். இதன்தொடர்ச்சியாக, இரவு 7 மணி அளவில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், 8 மணி அளவில் பு. புளியம்பட்டி, 9 மணி அளவில் தொட்டம்பாளையம் ஆகிய இடங்களில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எழுச்சியுரையாற்றுகிறார்.

வரும் 15-ம் தேதி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட கோபி நகரத்தில் மாலை 4.30 மணி அளவில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொளும் திரு. டிடிவி தினகரன், கொளப்பலூரில் மாலை 5.30 மணி அளவிலும், நம்பியூரில் மாலை 6.30 மணி அளவிலும், குன்னத்தூரில் இரவு 7 மணி அளவிலும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட ஊத்துக்‍குளியில் இரவு 7.30 மணி அளவிலும், பெருந்துறையில் இரவு 8.30 மணி அளவிலும், காஞ்சிகோயிலில் இரவு 9 மணி அளவிலும் மக்‍களை சந்தித்து எழுச்சியுரை நிகழ்த்துகிறார்.

வரும் 16-ம் தேதி மாலை 5.15 மணிக்‍கு ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட சூரன்பட்டி வலசு என்ற இடத்திலும், ஈரோடு கிழக்‍கு சட்டமன்ற தொகுதிக்‍குட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட வெள்ளோடு - மாரியம்மன் கோவில் பகுதியிலும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு எழுச்சியுரையாற்றுகிறார். மேலும், மொடக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட அவல்பூந்துறையில் இரவு 7.20 மணி அளவில் எழுச்சியுரையுடன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்ளும் திரு. டிடிவி தினகரன், தொடர்ந்து, இரவு 8.10 மணி அளவில் மொடக்‍குறிச்சி, இரவு 9.10 மணி அளவில் சிவகிரி, இரவு 10 மணி அளவில் கொடுமுடிக்‍குட்பட்ட சாலைபுதூர் ஆகிய இடங்களில் திரு. டிடிவி தினகரன் எழுச்சியுரையாற்றுகிறார்.

வரும் 17-ம் தேதி மாலை 5.25 மணி அளவில் ஈரோடு கிழக்‍கு சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட மரப்பாலம் என்ற இடத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்ளும் திரு. டிடிவி தினகரன், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்‍கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கனிராவுத்தர்குளம் என்ற இடத்தில் மாலை 6.20 மணி அளவில் எழுச்சியுரை நிகழ்த்துகிறார். இதனைத்தொடர்ந்து, இரவு 7.30 மணிக்‍கு பவானி சட்டமன்றத் தொகுதிக்‍குட்பட்ட கவுந்தப்பாடி, இரவு 8.10 மணிக்‍கு ஆப்பக்‍கூடல், இரவு 9.10 மணிக்‍கு பவானி அந்தியூர் ரோடு, இரவு 10 மணிக்‍கு சித்தார் ஆகிய இடங்களில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எழுச்சியுரையாற்றி தனது மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

எழுச்சியோடு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தலைமைக்‍ கழக நிர்வாகிகள், ஈரோடு புறநகர் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக்‍ கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் பெருந்திரளாகப் பங்கேற்க உள்ளதாக தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00