அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை

Feb 11 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், திருவொற்றியூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8-வது வட்டத்திற்குப்பட்ட பெரியார் நகரைச் சேர்ந்த மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.எம்.சீனிவாசன், திருவொற்றியூர் கிழக்குபகுதி செயலாளர் திரு.எஸ்.முரளி, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் திரு.கே.எ.குப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூத் கமிட்டி தொடர்பான ஆய்வு கூட்டங்கள் அகஸ்டீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட சுசீந்தரம், தேரூர், நல்லூர் உள்ளிட்ட ஏழு ஊர்களில் நடைபெற்றது. தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளும் கலந்து ஆலோசிக்க்பட்டன. இதில் கழக அமைப்பு செயலாளர் திரு. கே.டி. பச்சைமால், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாற்றுக்‍ கட்சியினர் சுமார் 50 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சுரேஷ்குமார், மேலப்பாளையம் பகுதி செயலாளர் திரு. ஹைதர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர கழகம் சார்பில், கூடலூரிலுள்ள 21 வார்டுகளை சேர்ந்த கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர கழக செயலாளர் திரு. செயது அனுப்கான் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மத்திய மாவட்டக்‍ கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍​கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஏ.ஜி.பஞ்சாட்சரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் களப் பணி குறித்து ஆலோசிக்‍கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர்களும், திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுமான திரு. ஆர்.மனோகரன், திருமதி சாருபாலா தொண்டைமான் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

கழகத் துணை பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வரும் 19-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். அவருக்‍கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவது குறித்து சேலம் மத்திய மாவட்டம் அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00