நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா- மணமகன் விசாகன் திருமணம் நடைபெற்றது
Feb 11 2019 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா- மணமகன் விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யா - மணமகன் விசாகன் திருமணம் சென்னை அடையாற்றில் உள்ள லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையே குடும்பத்தினர் பங்கு பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், முத்து படத்தில் இடம்பெற்றிருக்கும், 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுக்கு ரஜினிகாந்த் ஜாலி மூடில் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சியில், நடிகர் திரு.கமலஹாசன், தயாரிப்பாளர் திரு.தாணு, நடிகை ஆண்டிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ், மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை சௌந்தர்யா தமது வலைப்பதிவில் பதிவிட்டு வருகிறார்.