திண்டுக்கல் மாவட்டம் பள்ளி விழாவில் மீண்டும் உளறல் பேச்சு : நகைப்புக்குள்ளான திண்டுக்கல் சீனிவாசன்

Feb 11 2019 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
உளறல் பேச்சுக்கு பெயர் போன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் அது போன்ற ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அவர், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை பற்றி அவதூறான கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். "மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர் என அவர் பேசியது, அங்கு பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

குறைகளை சொல்லியே எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார் என்றும், முந்தைய ஆட்சியை பற்றி குறை சொன்னார் என்றும், தனது திரைப்படங்கள் மூலமாக ஏழைகள், அடிமைகள் பற்றிய குறைகளை சொல்லியே ஆட்சிக்கு வந்தார் என்று உளறிக்கொ‌ட்டினார்.

இதே வழியில், மாண்புமிகு அம்மாவும் செயல்பட்டதாக அவர் கூறியது, கூட்டத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தமிழக அரசின் பட்ஜெட் குறித்த அவரது பேச்சும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் என்பதற்கு பதிலாக, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று உளறிக் கொட்டினார்.

அமைச்சரின் இந்த பொறுப்பற்ற செயல், உளறல் பேச்சை திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் நிறுத்தவில்லை என்பதயே காட்டுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00