அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கழகப் பணிகள் குறித்து ஆலோசனை

Feb 13 2019 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறையில் கரூர் நாடாளுமன்ற, மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளரை வெற்றிபெற செய்ய அயராது பாடுபடுவது எனவும், எடப்பாடி அரசின் மக்கள் விரோத செயல்களை கிராமந்தோறும் சென்று பொதுமக்களிடம் எடுத்திருப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர்.மனோகரன் கழக அவைத்தலைவர் திரு. எஸ்.அன்பழகன், கழக தலைமை நிலைய செயலாளர் திரு. P.ழனியப்பன், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.தங்கவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தெள்ளாந்தி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த பலர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கே.டி. பச்சைமால் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர மாவட்ட அம்மா பேரவை சார்பில், மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சுரேஷ்குமார் தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளன்று, ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர்களை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக்‍ கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00