மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் போராட்டம்

Feb 13 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர்.

கரூர் கடவூர் ஒன்றியம் ராஜலிங்கம்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் வசதி கோரி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர், சுய உதவிக்குழு துப்புரவு தொழிலாளர்களாக 360 ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அதில் பொன்மலைக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 300 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக சம்பளம் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த பார்த்திபன் என்ற ஆங்கில ஆசிரியர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து அந்த பள்ளி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆசிரியர் பார்த்திபனை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி அரசின் அவசர கால சிகிச்சை மருத்துவ பயிற்சி பெற்ற மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பயிற்சி பெற்றவர்களை கொண்டு, அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்பாமல், மற்றவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து அவசர கால மருத்துவ சிகிச்சை பயிற்சி பெற்ற மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பார் அசோசியேஷன் சார்பில் ஒன்பது அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அதில், வழக்கறிஞர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, 5 தொழிலாளர்களை காரணமின்றி ஆலை நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, தனியார் உருக்காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பலமுறை வருவாய் துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00