அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணி நியமன விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 13 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தக பணியாளர் மற்றும் நிர்வாக பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர்பண்ணையைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடலாடி தாலுகா மருத்துவமனையில் காலியாகவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் - எம்.ஆர்.ஐ., இசிஜி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்களைக் கண்டறிய மற்றும் சிகிச்சைக்காக உள்ள கருவிகளின் விவரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தக பணியாளர் மற்றும் நிர்வாக பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா? குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சுகாதரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, திருச்சி மாவட்டம் திருமணமேடு தொடக்‍க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில், விதியை பின்பற்றாமல், சட்டவிரோதமாக 11 பேரை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு, உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், திருமணமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களாக தேர்வு செய்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விளக்‍கம் அளிக்‍க தமிழ்நாடு கூட்டுறவு சங்களுக்கான தேர்தல் ஆணையர் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அன்றைய தினத்திற்கு வழக்‍கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00