எடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு

Feb 14 2019 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி எடப்பாடி அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கணக்‍கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகளை, தூத்துக்‍குடியில் பொதுமக்‍கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வறுமைக்‍கோட்டிற்கு கீழேயுள்ள ஏழை மக்‍களுக்‍கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தூத்துக்‍குடி மாநகராட்சியில் உள்ள ராஜகோபால் நகருக்‍கு அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களுடன் கணக்‍கெடுப்பு நடத்தச் சென்றனர். ஆனால், அப்பகுதி மக்‍கள் தங்களுக்‍கு 2 ஆயிரம் ரூபாய் தேவையில்லை என்றும், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொடுக்‍க வேண்டும் என்றும், குடிநீர், சொத்துவரி போன்றவற்றை குறைக்‍கவேண்டும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தனர். மேலும், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டு, இப்பகுதிக்‍கு வாருங்கள் என அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

பணம் வழங்குவதற்காக கணக்‍கெடுப்பதற்காக வந்த அதிகாரிகளை பொதுமக்‍கள் விரட்டியடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00