உயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 18 2019 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளின் அறைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டுமென தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் மீது, அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் பல மாதங்களாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், ஐஜி முருகனை பணிமாற்றம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க, காவல்துறை உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தது. அதன்படி, அனைத்து அதிகாரிகள் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தலைமைச் செயளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் குற்றச்சாட்டுக்‍கு ஆளாகியிருக்‍கும் ஐ.ஜி. முருகன் மீது உரிய நடவடிக்‍கை எடுக்‍குமாறு அரசு தலைமைச் செயலாளருக்‍கு நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00