கூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு

Feb 18 2019 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருவதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு புறநகர் மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக அலுவலகத்தை திறந்து வைக்‍க வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, ஆயிரக்‍கணக்‍கான கழக நிர்வாகிகளும், பொதுமக்‍களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆயிரக்‍கணக்‍கான பொதுமக்‍களின் வரவேற்புக்‍கிடையே கழக அலுவலகத்தை திரு.டிடிவி தினகரன், திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அலுவலகத்தில் குத்துவிளக்‍கு ஏற்றி வைத்தார். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் திரு. டிடிவி தினகரனுக்‍கு வெள்ளிவாள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. டிடிவி தினகரன், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்‍கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்‍கடி கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருவதாகவும் விமர்சித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், பொதுமக்‍களின் பேராதரவோடு, 40 தொகுதிகளிலும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் அமோக வெற்றிபெறும் என திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. P. பழனியப்பன், மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00