5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் : அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Feb 21 2019 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வு அச்சத்திலேயே படிக்கக்‍கூடிய சூழல் உருவாகும் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதுத்தேர்வை 5-ம் வகுப்பு முதல் வைப்பது கடினமான ஒன்று என்றும், மாணவர்கள் ஒருவிதமான அச்சத்துடன் படிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகத்தில் இதுபோன்று வடிகட்டுதல் கல்வி முறை கிடையாது என தெரிவித்த கல்வியாளர்கள், கூலி வேலைக்கு செல்லக் கூடியவர்களின் குழந்தைகள், பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகும் என தெரிவித்துள்ளனர்.

இத்தேர்வு முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல ஆலோசகர்கள், பள்ளி குழந்தைகளிடையே மனரீதியான சுமைகள் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இதைத் தவிர்த்து கற்பிக்கும் முறைகளை மாற்றி அமைத்தல் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த தேர்வு முறைக்‍கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00