வறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு

Feb 25 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

வறுமைக்‍கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாயை பொதுமக்களுக்கு வழங்குவதில் குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்‍கள் முற்றுகையிட்டனர். கணக்கெடுப்பினை அரசு அலுவலகர்கள் முறையாக நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் பயனாளிகளுக்‍கு இந்தப் பணம் கிடைக்‍காத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதிக்குட்பட்ட பகுதிகளான கட்டக்குளம், ஆண்டிபட்டி பகுதிகளில் வாழும் அருந்ததியினர் சமுதாய மக்கள், தங்களுக்கு தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்க வலியுறுத்தியும், இலவச வீட்டுமனை பட்டா கோரியும் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00