எடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு

Feb 22 2019 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி அணியில், பா.ம.க-விற்கு இணையாக இடங்களை கேட்டு தே.மு.தி.க நிர்பந்தம் செய்து வரும் நிலையில், அக்‍கட்சியின் தலைவர் திரு.​ விஜய்காந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

எடப்பாடி அணியில் பா.ம.க-விற்கு 7 மக்‍களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்‍கியதால் அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க., தங்களுக்‍கும் அதே எண்ணிக்‍கையில் தொகுதிகளை கேட்டு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பா.ஜ.க அரசு​மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பலன் அளிக்‍கவில்லை.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. திருநாவுகரசர், திரு. விஜய்காந்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது உடல் நலம் விசாரித்ததுடன் அரசியல் குறித்தும் பேசியதாக திரு. திருநாவுகரசர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திரு. விஜய்காந்தை, நடிகர் திரு. ரஜினிகாந்த், இன்று திடீரென சந்தித்துப் பேசினார். விஜய்காந்தின் உடல் நிலை குறித்து விசாரித்ததாக செய்தியாளர்களிடம் திரு . ரஜினிகாந்த் கூறினார்.

என்றாலும், எடப்பாடி அணியுடன் பா.ம.க-விற்கு இணையாக, இடங்களை கேட்டு நிர்பந்தம் செய்து வரும் தே.மு.தி.க, அதற்கான தந்திரமாகவே, திருநாவுகரசர் மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00