தேர்தலில் வெற்றி என்பது இலக்காக இருந்தாலும், அதற்காக ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடமாட்டோம் : கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டம்

Feb 25 2019 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தலில் வெற்றி என்பது இலக்காக இருந்தாலும், அதற்காக ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை செய்யமாட்டோம் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். வெற்றியை மாத்திரமே குறிவைத்து, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது என தெரிவித்தார்.

மாண்புமிகு அம்மா, நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என குறிப்பிட்ட, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், அவர் மறைவுக்குப் பிறகு, அவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என அவரை இழிவுபடுத்தும் விதமாக தெரிவித்த தே.மு.தி.க.வுடன் ஒருபோதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கூட்டணிக்காக முயற்சி செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கண்டு அஞ்சி, எடப்பாடி அணியினர் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என எடப்பாடி அணியினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை மிரட்டிப் பணிய வைத்ததால், எடப்பாடி அணியினர் இதுபோல் முறையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ, அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என உறுதிபடத் தெரிவித்த திரு. டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெற்று, பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் எனத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00