நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், மக்‍களின் பேராதரவோடு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மகத்தான வெற்றிபெறும் - கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டத்தில் டிடிவி தினகரன் உறுதி

Mar 13 2019 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், மக்‍களின் பேராதரவோடு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மகத்தான வெற்றிபெறும் என, திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம், திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில் பேசிய திரு.டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மாவை விமர்சித்த கட்சிகளுடன் எடப்பாடி தரப்பினர் கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட கழக வேட்பாளர்கள் தயாராக உள்ளதாகவும், மக்‍களின் பேராதரவோடு, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி உட்பட 19 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மகத்தான வெற்றிபெறும் என திரு.டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தக்‍ கூட்டத்தில், சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஜி.பார்த்திபன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஏ.ஜி. பஞ்சாட்சரம், தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம், வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. மா.கி. வரதராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00