பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்‍கு எதிராக வலுக்‍கும் போராட்டம் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Mar 15 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவ விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 500-க்‍கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக அரசை கலைக்க வேண்டும் என மாணவிகள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருச்சியில், அனைத்து கல்லூரி மாணவர்கள், நள்ளிரவின்போது ஜல்லிக்கட்டு சாலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணாக்‍கர்கள், உண்மை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பிறகு காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஜல்லிக்கட்டு சாலையில் மாணவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இதேபோல், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாணவர்கள் பேரணியாக சென்று, திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தடுக்‍க முயன்ற மாணவர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அரியமங்கலம் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் தலையீடு இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் - பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கென புகார் அளித்திட சிறப்பு போலிசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00