நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்‍கில் மக்‍களின் உணர்வுகளுக்‍கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்‍க வேண்டும் : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Mar 18 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்‍கில் உச்சநீதிமன்ற நோட்டீசுக்‍கு பதில் அளிக்‍கும்போது மக்‍களின் உணர்வுகளுக்‍கு ஏற்ப, இத்திட்டத்திற்கு நிரந்தரத் தடை விதிக்‍கும் வகையில், எடப்பாடி அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம், அம்பரப்பர் மலைகளில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த 'சாதாரண கட்டிடம் கட்டும்' பிரிவின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியதற்கு எதிராக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்‍கு, நம்பிக்‍கை அளிக்‍கும் வகையிலான ஒரு கட்டத்தை எட்டியிருப்பதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின்படி, இதுபோன்ற அனுமதியை அளிக்‍கும் அதிகாரம் மாநில அரசுக்‍குத்தான் உள்ளது - ஆனால், அந்த அதிகாரத்தைப் பறித்து 'சிறப்புத் திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசு தானே ஒரு அனுமதியை அளித்தது - இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்‍கை விசாரணைக்‍கு அனுமதித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்‍கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளதை திரு. டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

நியூட்ரினோ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அரியவகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கொண்ட மேற்குதொடர்ச்சி மலையின் சூழல் முற்றிலும் அழிந்துபோகும் என்பதுடன், தேனி மாவட்டத்தின் விவசாய நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் பிடிப்பு பகுதியாகவும் இருக்‍கும் மேற்குத்தொடர்ச்சி மலை தனது இயல்பை முற்றிலும் தொலைத்து ஒட்டுமொத்த விவசாயத்தையும் பாதிக்‍கச் செய்யும் என்பதால், தேனி மாவட்ட மக்‍கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு சட்டவிரோதமாக சில அனுமதிகளை அளித்தபோது, அதை வேடிக்‍கை பார்த்தது எடப்பாடி பழனிசாமியின் அரசு - இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள உணர்வில் சிறிதளவையாவது எடப்பாடியின் அரசு இப்போதாவது காட்டி, இந்த வழக்‍கு தொடர்பான நோட்டீசுக்‍கு பதிலளிக்‍கும்போது, தேனி மாவட்ட மக்‍களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதில் மனுவைத் தயாரித்து, நியூட்ரினோ திட்டத்திற்கு நிரந்தரத் தடைவிதிக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - அதை விடுத்து மக்‍களை துச்சமாக மதிக்‍கும் தங்களது இயல்பான போக்‍கை இப்போதும் தொடர்ந்தாலோ, மத்திய அரசிற்கு சேவகம் செய்யும் தங்கள் வழக்‍கத்தை இந்த விஷயத்திலும் கடைபிடித்தாலோ தேனி மாவட்ட மக்‍கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்‍கமாட்டார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புவதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00