கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணி : கழக தொண்டர்கள் சூளுரை

Mar 19 2019 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்‍குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக, கழக தொண்டர்கள் சூளுரைத்துள்ளனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் கழக அலுவலகத்தில், ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.கே.சி.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் பிரதமரை நிர்ணயிக்கும் என்றும், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், 100 சதவீதம் உறுதியான வெற்றி பெறுவோம் என உறுதிபட தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் திரு.நரேந்திரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கலாராணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சண்முகராஜ், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் திரு.வாரணவாசி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் தொகுதியின் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.வ.து.ந.ஆனந்த், இன்று ராமநாதபுரம் தொகுதிக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கரங்களில் சமர்ப்பிப்போம் என சூளுரைத்தார்.

பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிடும் டாக்டர் முத்தையா, துரோகிகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, இம்முறை வெற்றி பெற்று நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் திரு.எம்.ராமசாமி, பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரியில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்று தரவும், படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00