நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு : பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக சூளுரை

Mar 21 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக சூளுரைத்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.ஆ.இளவரசன் அரியலூரில் மாவட்ட கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருக்கு, அரியலூர் மாவட்ட செயலாளர் திரு.துரை.மணிவேல் தலைமையில் திரளான கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட செயலாளர்கள் திரு.பெரம்பலூர் எஸ். கார்த்திகேயன், திரு.பாலமுருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறையில், கழக வேட்பாளர் திரு.இளவரசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவரை ஆதரித்து செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து, காவல் நிலையம் வரை கழக நிர்வாகிகள் பேரணியாக சென்றனர். அப்போது, செந்துறை ஒன்றிய பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.கார்த்திகேயன், ஒன்றிய கழக செயலாளர், அணிச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில், கழக வேட்பாளரை ஆதரித்து ஆயிரக்கணக்காணோர் ஊர்வலமாக சென்று, காஞ்சிவனம் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். மேலூர் தொகுதிக்கு வருகை தந்த கழக வேட்பாளருக்கு பல்வேறு தரப்பினரும் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00