தஞ்சையில், முனைவர் ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி குறுந்தகடு வெளியீடு - டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு

Mar 21 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "முனைவர் ம.நடராசன் வாழும் நினைவுகள்" என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது.

புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தஞ்சை அருகே விளார் கிராமத்தில், முள்ளிவாய்க்‍கால் நினைவு முற்றத்திற்கு எதிரே அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, தஞ்சை - புதுக்‍கோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரு.டிடிவி தினகரன் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார்.

"முனைவர் ம.நடராசன் வாழும் நினைவுகள்" குறும்பட குறுந்தகட்டினை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எல். கணேசன் வெளியிட, சிங்கப்பூர் துணைப் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த டாக்‍டர் ஜோஸ்வா, அமெரிக்‍காவின் Maryland அரசாங்கத்தை சேர்ந்த டாக்‍டர் இராஜன் நடராஜன் ஆகியோர் பெற்றுக்‍கொண்டனர். கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி, தமிழறிஞர்கள் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் ம.நடராசன் வாழும் நினைவுகள் என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக அவைத்தலைவர் திரு.எஸ்.அன்பழகன், தலைமை நிலையச் செயலாளர் திரு.பி. பழனியப்பன், கழகப் பொருளாளர் திரு.எம். ரெங்கசாமி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், மூத்த வழக்‍கறிஞர் தஞ்சை திரு.அ.இராமமூர்த்தி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்‍டர் எஸ்.ஏ. சின்னசாமி, காவிரி பாசன அனைத்து விவசாயி சங்கத்தை சேர்ந்த திரு.பி.ஆர்.பாண்டியன், தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் திரு.அய்யாக்‍கண்ணு, தமிழக வாழ்வுரிமைக்‍ கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு.உ.தனியரசு, முக்‍குலத்தோர் புலிப்படை தலைவர் திரு.கருணாஸ், தமிழ்ப் பேரரசு கட்சித்தலைவர் திரு.வ.கௌதமன், உணர்ச்சிப் பாவலர் திரு.காசி ஆனந்தன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.பன்னீர்செல்வம், இந்திய தேசிய லீக்‍ முன்னாள் எம்.எல்.ஏ. திரு.எம்.ஜி.கே. நிஜாமுதீன், முன்னாள் எம்.பி. திரு.எஸ்.சிங்கார வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருதப்பா அறக்‍கட்டளையின் திரு.ம.பழனிவேலு நன்றியுரை நிகழ்த்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00