சென்னை அமைந்தகரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த அ.ம.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீது தி.மு.கவினர் தாக்குதல் : 2 பெண்கள் படுகாயம்

Apr 12 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அமைந்தகரை பகுதியில் வாக்‍காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழகத்தினர் மற்றும் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீது தி.மு.கவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர், வாக்‍காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை அமைந்தகரை மஞ்சக்‍கொல்லை தெரு பகுதியில் இப்பணியை மேற்கொண்டிருந்த அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீது தி.மு.க.வினர் திடீர் தாக்‍குதல் நடத்தினர். இதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். தி.மு.க.வினரின் இந்த தாக்‍குதலை கண்டித்து கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00