தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்திற்காக போக்குவரத்து மாற்றம் : பொதுமக்கள் கடும் அவதி

Apr 12 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்காக, போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

OPS மகனும் தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, பெரியகுளம் காந்தி சிலை அருகே ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்க வருகை தந்தார். இதனால் நேற்று மாலை 6 மணி முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலானவை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

வாகன நெரிசலில் சிக்கிய முதியவர் ஒருவர், தான் சம்பாதித்த சொத்தை தனது மகன் மூலம் ஓபிஎஸ் பாதுகாக்க நினைக்கிறார் என்றும் இவர்களுக்கு ஓட்டளித்தால் அனைத்து வரிகளும் உயரும் என்றும் உள்ளக்‍ குமுறலை வெளிப்படுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00