நீதிமன்றம் தடை விதித்த, 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உரை - ஒரே மேடையில் அமர்ந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்காத ராமதாசுக்கு விவசாயிகள் கண்டனம்

Apr 15 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் பொதுக்கூட்டத்தில், 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி மத்திய அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராமதாஸைக் கண்டித்து தருமபுரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனிடையே, அதிமுக - பாஜக - பாமக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிதிகட்கரி, சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கூறியுள்ளார். அப்போது மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமியும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த தருமபுரி மாவட்ட விவசாயிகள், 8 வழிச் சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் மோடிக்கும், அதிமுக கூட்டணிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00