நரேந்திர மோடியோ, ராகுல் காந்தியோ, காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு உதவ மாட்டார்கள் - கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Apr 16 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
நரேந்திர மோடியோ, ராகுல் காந்தியோ, ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு உதவமாட்டார்கள் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. முட்டுக்‍காடு முனுசாமியை ஆதரித்து, காஞ்சிபுரம் தேரடியில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அங்கு ஆயிரக்‍கணக்‍கில் திரண்டிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள், இளைஞர்கள், அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் எழுச்சியுரையாற்றிய திரு. டிடிவி தினகரன், மோடியாக இருந்தாலும், ராகுலாக இருந்தாலும் நமது ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு உதவமாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. முட்டுக்‍காடு முனுசாமியை ஆதரித்து, வாலாஜாபாத் பகுதியில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், திமுக தப்பி தவறி ஆட்சிக்கு வந்தால், மக்கள் சொத்தை பறித்துக் கொள்வார்கள் என்றும், காஞ்சிபுரம் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அ.ம.மு.க நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து செங்கல்பட்டு பகுதியில், கழக வேட்பாளர் திரு. முட்டுக்‍காடு முனுசாமியை ஆதரித்து, பேசிய திரு. டிடிவி தினகரன், தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும், தேசிய கட்சிகளை புறக்கணித்துவிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
செய்தி வீடியோ
































சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00