தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 71 சதவீத வாக்‍குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் : அதிகபட்சமாக நாமக்‍கல் தொகுதியில் 80 சதவீத வாக்‍குகள் பதிவு

Apr 19 2019 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 70 புள்ளி ஒன்பது பூஜ்ஜியம் சதவீத வாக்‍குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்‍களவைக்‍கான 2-ம் கட்ட தேர்தல் நேற்று, தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்‍கு நடைபெற்றது. தமிழகத்தில் 70 புள்ளி ஒன்பது பூஜ்ஜியம் சதவீத வாக்‍குகள் பதிவாகின. அதிகபட்சமாக நாமக்‍கல் தொகுதியில் 79 புள்ளி ஏழு ஐந்து சதவீத வாக்‍குகள் பதிவாகின. திருவள்ளூரில் 72 புள்ளி பூஜ்ஜியம் இரண்டு சதவீதம், வடசென்னையில் 61 புள்ளி ஏழு ஆறு - தென்சென்னையில் 57 புள்ளி நான்கு மூன்று - மத்திய சென்னையில் 57 புள்ளி எட்டு ஆறு சதவீத வாக்‍குகள் பதிவாகின.

ஸ்ரீபெரும்புதூரில் 60 புள்ளி ஆறு ஒன்று சதவீதம் - காஞ்சிபுரத்தில் 71 புள்ளி ஒன்பது நான்கு சதவீதம் - அரக்‍கோணத்தில் 74 புள்ளி மூன்று ஐந்து சதவீதம் - கிருஷ்ணகிரியில் 73 புள்ளி எட்டு ஒன்பது சதவீத வாக்‍குகளும் பதிவாகின.

தர்மபுரியில் 75 புள்ளி ஒன்பது இரண்டு சதவீதம் - திருவண்ணாமலையில் 71 புள்ளி இரண்டு ஏழு சதவீதம் - ஆரணியில் 76 புள்ளி நான்கு நான்கு சதவீதம் - விழுப்புரத்தில் 74 புள்ளி ஒன்பது ஆறு சதவீத வாக்‍குகள் பதிவாகின.

கள்ளக்‍குறிச்சி தொகுதியில் 76 புள்ளி மூன்று ஆறு சதவீதமும், சேலத்தில் 74 புள்ளி ஒன்பது நான்கு சதவீதமும், ஈரோட்டில் 71 புள்ளி ஒன்று ஐந்து சதவீதமும், திருப்பூரில் 64 புள்ளி ஐந்து ஆறு சதவீத வாக்‍குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் 70 புள்ளி ஏழு ஒன்பது சதவீத வாக்‍குகளும், கோயம்புத்தூரில் 63 புள்ளி ஆறு ஏழு சதவீதமும், பொள்ளாச்சியில் 69 புள்ளி ஒன்பது எட்டு சதவீதமும், திண்டுக்‍கல்லில் 71 புள்ளி ஒன்று மூன்று சதவீத வாக்‍குகளும் பதிவாகின.

கரூர் தொகுதியில் 78 புள்ளி ஒன்பது ஆறு சதவீதம் - திருச்சிராப்பள்ளியில் 71 புள்ளி எட்டு ஒன்பது சதவீதம் - பெரம்பலூரில் 76 புள்ளி ஐந்து ஐந்து சதவீதம் - கடலூரில் 74 புள்ளி நான்கு இரண்டு சதவீத வாக்‍குகள் பதிவாகின.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 78 புள்ளி நான்கு மூன்று சதவீதமும், மயிலாடுதுறையில் 71 புள்ளி ஒன்று மூன்று சதவீதமும், நாகப்பட்டிணம் 77 புள்ளி இரண்டு எட்டு சதவீதமும், தஞ்சாவூரில் 70 புள்ளி ஆறு எட்டு சதவீதமும் பதிவாகியுள்ளது.

சிவகங்கை 71 புள்ளி ஐந்து ஐந்து சதவீதம் - மதுரை 62 புள்ளி பூஜ்ஜியம் ஒன்று சதவீதம் - தேனி 75 புள்ளி இரண்டு எட்டு சதவீதம் - விருதுநகர் 70 புள்ளி இரண்டு ஏழு சதவீத வாக்‍குகளும் பதிவாகின.

ராமநாதபுரம் 67 புள்ளி எட்டு ஐந்து சதவீதம் - தூத்துக்‍குடி 69 புள்ளி நான்கு ஒன்று சதவீதம் - தென்காசி 71 புள்ளி ஆறு பூஜ்ஜியம் சதவீதம் - திருநெல்வேலி 68 புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது சதவீதமும், கன்னியாகுமரியில் 62 புள்ளி மூன்று இரண்டு சதவீத வாக்‍குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00