மதுரையில் தேர்தல் தோல்வி பயத்தால் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பினர் அராஜகம் : அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது கொலைவெறித் தாக்‍குதல் நடத்தியதால் பதற்றம்

Apr 19 2019 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டத்தில் வாக்‍குப்பதிவு முடிவடைந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக அராஜகத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் மீது கொலைவெறித் தாக்‍குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடியில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் மீது கொலை வெறித் தாக்‍குதல் நடத்தினர். இதில், கழகத்தினர் இரண்டு பேரின் மண்டை உடைந்தது. தாக்‍குதலில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அமமுகவைச் சேர்ந்த ​திரு.ராமச்சந்திரன், பலத்த காயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த அவரை பார்க்க வந்த உறவினர் மனோஜ்குமாரை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராம நல்லூர் பேரூராட்சியில், திமுகவை சேர்ந்த வைரப்பெருமாள் என்பவர் கள்ள ஓட்டு போடுவதாக கிடைத்த தகவலின்பேரில், தேர்தல் அதிகாரியிடம், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சக்திவேல் தலைமையில், சின்னசாமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் முன்னிலையில் திமுகவினர் தாக்‍குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00