நாகை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு : அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு கண்டனம்

Apr 19 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் மதிப்பூதியம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, காத்திருப்போர் பட்டியலில், தேர்தல் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட வேதாரண்யம், கீழ்வேளுர், நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர், செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 17ம் தேதி காலை முதல் தங்கவைக்கப்பட்டனர்.

செம்பனார்கோவில் மையத்தில் தங்கியிருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம், பணிக்காக வந்து தங்கியிருப்பதற்கான கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டு, அடிப்படை வசதிகளை செய்து தராததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தனியார் கல்லூரி வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதேபோல், திருப்பூரை அடுத்த உடுமலையில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உரிய பணி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்காமல் அலைக்கழிக்‍கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், வட்டாட்சியரைக் கண்டித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00