தமிழகத்தில் காலியாக இருக்‍கும் மேலும் 4 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் பெயர் வெளியீடு - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Apr 23 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் காலியாக இருக்‍கும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் பெயர்களை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இதனை வெளியிட்டுள்ளார்.

சூலூர் தொகுதியில் கோவை புறநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கே. சுகுமார் அறிவிக்‍கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக்‍ குழு உறுப்பினர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பெருந்தலைவர் ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.

அரவக்‍குறிச்சி தொகுதியில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை தலைவராக பணியாற்றிவரும் திரு. பி.எச். சாகுல் ஹமீது போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்‍கும் உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான திரு. ஐ. மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்‍கு, தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளராகவும், கழக எம்.ஜி.ஆர். அணி செயலாளராகவும் பணியாற்றி வரும் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சுந்தர்ராஜ் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ளார். இவர் ஒன்றியக்‍ குழு உறுப்பினர், மாநில ஆவின் இயக்‍குநர், நெல்லை ஆவின் இயக்‍குநர் ஆகிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00