நாகை மாவட்டம் சீர்காழியில் சாலை மறியல் போராட்டம் : ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Apr 22 2019 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்திரமேரூரை அடுத்த அழிசூர் பகுதியில் இருந்து, கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தை சரிவர இயக்காததைக் கண்டித்து. உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள வேடபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை அப்பகுதி மக்‍கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்‍கப்பட்டது.

பொன்னாமரவதியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் காட்பாடியில், முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்பரப்பியில் கலவரத்தை ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய பா.ம.க.வை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி புத்தூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய முனுசேகர் என்பவர், தேர்தலின்போது ஆளுங்கட்சிக்‍கு ஆதரவாக செயல்படாததால், காத்திருப்பு பட்டியலில் வைத்து நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டது. இதனைக்‍ கண்டித்தும், அவர் மீதான நடவடிக்‍கையை திரும்பப்பெறக்‍ கோரியும் நீடாமங்கலம் பகுதி மக்‍கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00