கூடங்குளம் அணு உலை செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், விரிவாக்கப் பணிகளை நிறுத்த வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தல் - நிபுணர் குழு ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை

Apr 23 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூடன்குளம் அணு உலை செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், விரிவாக்கப் பணிகளை நிறுத்தி, நிபுணர் குழு ஆராய வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூடன்குளம் அணு உலைகளின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அங்கு பிரச்சினை ஏற்பட்டு, இரண்டு அணு உலைகளும் கடந்த 6 ஆண்டுகளில் 66 முறை நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடக்கம் முதலே அப்பகுதி மக்களும், சூழலியல் ஆய்வாளர்களும் கூறி வந்த புகார்கள் இதன்மூலம் உண்மையாகி உள்ளது. எனவே, செயல்பாட்டில் உள்ள இரு அணு உலைகளை சுதந்திரமான குழுவை அமைத்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே இயக்க வேண்டும் என வலியுறுத்தினார். அக்குழுவில் கூடன்குளம் பகுதிமக்களின் பிரதிநிதியும் இடம் பெறவேண்டும் என்றும், அதுவரை புதிய அணு உலை அமைப்பதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், ஏதேனும் பேரிடர் ஏற்படும் முன் மத்திய, மாநில அரசுகள் கூடன்குளம் அணுஉலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00