பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வசதி செய்து தரும் விவகாரம் - மத்திய அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Apr 23 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வசதி செய்து தருவது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3G சேவையை மட்டும் வழங்கி வருகிறது. ஆனால் மற்ற தனியார் செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் அனைத்தும், அதிவேக சேவையான 4G சேவையை வழங்கி வருகின்றன. மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆகியவை பல தனியார் மொபைல் நிறுவனங்களுக்கு லாபம் அடையும் வகையில் செயல்படுகிறது. எனவே 4ஜி சேவையை, பொதுமக்கள் பயன் பெறும் வகையில் விரைந்து வழங்க மத்திய அரசுக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் திரு.என்.கிருபாகரன், திரு.எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரிய பதிலளிக்குமாறு, உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00