மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் சித்தரவதை செய்வதாக கைதிகள் புகார் - நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு கைதிகளிடம் நீதிபதி விசாரணை

Apr 24 2019 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் சோதனை என்ற பெயரில், சித்தரவதை செய்வதாகப் புகார் தெரிவித்து, கற்களை வீசியும், பிளேடால் உடலை அறுத்துக் கொண்டும், சிறைச்சாலை கட்டிடம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம், நீதிபதி விசாரணை நடத்தினார்.

மதிய உணவுக்குப் பிறகு கைதிகளின் உடலில் வழக்கமாக நடத்தப்படும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது காவல்துறையினர் தொடர்ந்து ஈவிரக்கமற்ற முறையில், கொடுமைப் படுத்துவதாக குமுறிக் கொண்டிருந்த கைதிகள் திடீரென அதிரடி போராட்டத்தில் இறங்கினர். கைதிகளுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்த கைதிகள், சிறைச்சாலை கட்டிடத்தின் மீது ஏறி கற்களை வீசி எறிந்தும், தங்கள் உடலை பிளேடால் அறுத்துக் கொண்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாவட்ட ஆட்சியரும், நீதிபதியும் மதுரை மத்திய சிறைக் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக மதுரை மத்திய சிறை பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பலமணி நேரமாக நீடித்த சிறை கைதிகளின் போராட்டத்தை அடுத்து அங்கு விரைந்து சென்ற மதுரை மேற்கு வட்டாட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து சிறைவாசிகளிடம் மாவட்ட சட்டபணி ஆணைக்குழு சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். காயமடைந்த 5க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் டிஐஜி பழனி போராட்டம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00