தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பு

May 13 2019 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் அரவக்‍குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்களும், தொண்டர்களும், தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. ஆர். சுந்தரராஜ் தொகுதிக்குட்பட்ட கோவில்பத்து, முத்தாலங்குறிச்சி, ஆலகுடி ஆகிய பகுதிகலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருங்குளம் ஒன்றியச் செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன் அப்போது உடன் இருந்தார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. PH சாகுல் அமீது, தொகுதிக்‍கு உட்பட்ட சாலப்பாளையம், புதூர், சின்னக்கேத்தம்பட்டி, பெரிய கேருத்தம்பட்டி உள்ளிட்ட 10க்‍கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு.சீனிவாசன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு.குமரேசன் மற்றும் பகுதி கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍குசேகரித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு.இ.மகேந்திரன், சின்ன கண்மாய், நாகம்மாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன், கழக இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இஷிகா, கழக வர்த்தக அணி செயலாளர் திரு.சவுந்திரபாண்டியன், பகுதி கழக செயலாளர் திரு.ராமமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் திரு.மனோகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.செல்வம், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் திரு.பிலால்தீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00