காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு முடக்‍கி வைத்திருக்‍கும் மோடி அரசுக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரைப் பெற பழனிசாமி அரசு நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்

May 15 2019 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு முடக்‍கி வைத்திருக்‍கும் மோடி அரசுக்‍கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரைப் பெற பழனிசாமி அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், குறுவை நெல் சாகுபடிக்காகவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காவிரியில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177 புள்ளி இரண்டு ஐந்து டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை முழுமையாக செயல்படுவதைத் தடுத்து வைத்திருக்கிறார்கள் - 2018 ஜூலை மாதத்திற்குப் பிறகு காவிரி ஆணையமோ, ஒழுங்காற்றுக் குழுவோ இதுவரை கூடவே இல்லை - தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட 26 மாவட்டங்கள் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் காவிரி தண்ணீரைத்தான் நம்பி இருக்கின்றன - கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக மக்கள் குடங்களோடு அலைவது மனதைப் பிசைகிறது - மற்றொரு புறம் காவிரி டெல்டாவில் அடுத்த மாதம் குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் கடந்த டிசம்பரில் இருந்து இம்மாதம் 31 தேதி வரையிலான காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 19 புள்ளி 5 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும் - ஆனால் வழக்கம் போல கர்நாடகா உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு அடாவடி செய்து கொண்டிருக்கிறது - தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் எப்போதும் வெறுப்பை உமிழும் மத்திய அரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை என்றும், அதற்குப் பதிலாக குதிரை கீழே தள்ளி குழியும் பறித்த கதையாக ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தைப் பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை மொத்தமாக டெல்லியிடம் அடகு வைத்துவிட்டு, கை கட்டி, வாய் பொத்தி நிற்கும் பழனிச்சாமி அரசோ காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை - மாறாக தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் - ராகுல் காந்தியைப் பிரதமராக்குவோம் என்று ஊருக்கு ஊர் முழங்கும் மு.க. ஸ்டாலினும், அதே ராகுல் காந்தியின் ஆதரவோடு கர்நாடகாவில் இருக்கும் அரசிடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என திரு. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எனவே, இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல், குடிநீர்ப் பஞ்சத்தைச் சமாளிப்பதற்கும், குறுவை நெல் சாகுபடி பணிகளுக்கும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவதற்கு பழனிச்சாமி அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00