பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்‍கு விரைவில் முடிவுகட்டப்பட வேண்டும் என சூலூர் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் உறுதி - விரைவில் மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சி அமைக்‍கப்படும் என திட்டவட்டம்

May 15 2019 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படும், மக்‍கள் விரோத எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்‍கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என சூலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்‍களின் ஆதரவோடு, மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சி அமைக்‍கப்படும் என அவர் உறுதியுடன் கூறினார்.

தமிழகத்தில், வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திரு. டிடிவி தினகரன், சூலூர் தொகுதிக்‍குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்‍களைச் சந்தித்து, கழக வேட்பாளர் திரு. K. சுகுமாரை ஆதரித்து, எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். மாதப்பூர் பகுதியில் வாக்கு சேகரிக்க வருகை தந்த அவருக்கு, அங்கு திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர், வாழ்த்து முழக்‍கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தொட்டிபாளையம், சோமனூர், செம்மாண்டம் பாளையம், வடுகன் காளிபாளையம், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் திரு. டிடிவி தினகரன், பொதுமக்‍களிடையே எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமான பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கழக வேட்பாளர் திரு. சுகுமாரை ஆதரித்து, திரு. டிடிவி தினகரன், சாமளாபுரம் பகுதியில் கூடியிருந்த மக்களிடையே, பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் அப்பகுதி மக்களிடையே பேசிய அவர், மக்‍கள் விரோத எடப்பாடி ஆட்சியை, வரும் 23-ஆம் தேதி, மோடி அல்ல அவரது டாடி நினைத்தாலும் பாதுகாக்க முடியாது என கூறினார்.

கழக வேட்பாளர் திரு சுகுமாரை ஆதரித்து, செங்கந்துறை, காடாம்பாடி பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் திரு.டிடிவி தினகரன், பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்‍கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து, காங்கயம் பாளையத்தில் கூடியிருந்த பொதுமக்‍களிடையே உரையாற்றிய திரு. டிடிவி தினரகன், தமிழகத்தில் ஊழல் இல்லாத மக்கள் ஆட்சியை அமைத்திட, கழக வேட்பாளருக்‍கு பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமெனக்‍ கேட்டுக்‍கொண்டார்.

காங்கயம் பாளையம் பிரச்சாரத்தின்போது திருப்பூர் 4-வது மண்டல துணைத் தலைவர் திரு. ஆர்.செந்தில் குமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. வி. முருகானந்தன், திருப்பூர் மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி தலைவர் திரு. செல்வம் உள்ளிட்டோர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கழக வேட்பாளர் திரு. K. சுகுமாரை ஆதரித்து, சூலூர் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த பொதுமக்களிடையே பரிசு பெட்டகம் சின்னத்திற்கு திரு. டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், மாண்புமிகு அம்மாவின் கோட்டையாக இருந்த ஆர்.கே.நகர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாறியதுபோல, இந்தத் தேர்தலில், கொங்கு மண்டலமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாறும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00