வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

May 14 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்களும், தொண்டர்களும், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி, முத்துகவுண்டனூர், வெங்கிடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கழக வேட்பாளர் திரு. P.H. சாகுல் அமீது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சீனிவாசன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு. குமரேசன் மற்றும் பகுதி கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு, வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.

கழக வேட்பாளர் திரு.P.H. சாகுல் அமீது, பள்ளப்பட்டி - அரவக்குறிச்சி நெடுச்சாலையில் உள்ள அண்ணா நகர், முத்துநகர் குமலவலசு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள், தாமாக முன்வந்து, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்குதான் தங்கள் வாக்‍கு என உறுதி அளித்தனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு. குமரேசன் மற்றும் பகுதி, கிளைக்கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. ஆர் சுந்தர்ராஜ், தொகுதிக்கு உட்பட்ட அனவரதநல்லூர், விட்டிலாபுரம், வசவப்பபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கிராம மக்கள் அவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத்தினர் உடன்சென்றனர்.

இதனிடையே, ஒட்டப்பிடாரம் தொகுதி கழக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளர் திரு.எஸ்.வி.பி.எஸ். மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாவூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 15-ஆம் தேதி இறுதி கட்ட பிரச்சாரம் செய்ய வருகை தரும் கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது, கழக வேட்பாளர் திரு. சுந்தர்ராஜை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய களப்பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00