முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

May 22 2019 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்‍கைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை பம்மலை அடுத்த அனகாபுத்தூர் 18-வார்டு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 60 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கத்தால், அப்பகுதி மக்கள் அனகாபுத்தூர் நகராட்சி ஆணையரை அனுகினர். முறையாக பதில் அளிக்கததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில், கடந்த மாதம் மின்மோட்டார் பழுதடைந்து இதுவரை சரிசெய்யாததால் அப்பகுதியில் வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், புதிய மின் மோட்டார் பொருத்தி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என நரிக்‍குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் 6-வது வார்டில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள், சோளிங்கர்-சித்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்‍கப்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணையை தூர் வாராததால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே இதற்கான திட்ட மதிப்பீடுகள் அனுப்பி வைத்தும், எடப்பாடி அரசு கண்டு கொள்ளவில்லை என பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00