திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு : காவல்துறை விசாரணை

May 22 2019 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எரிந்த நிலையில் சடலமாக இருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிய குடியிருப்பு வளாகத்திற்கு எதிரே உள்ள கறுவை மரத் தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இளம்பெண் தீயிட்டு கொளுத்தப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை கிடந்தன. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 தினங்களுக்கு முன்பாக கொலை நடத்திருக்கலாம் எனவும், இளம்பெண் கடத்தி வரப்பட்டு, குடிபோதையில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீ வைத்து எரித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கல் ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மனைவி சங்கீதா வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். திருமணம் ஆகி ஓராண்டாகியுள்ள நிலையில் கனவன் மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, சங்கீதா கிணற்றில் சடலாமாக மிதந்துள்ளார். சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் வீரபத்திரரை கைது செய்ய கோரியும் அவரது உறவினர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00